ஆணி என எழுத்து ஆழமாக இறங்கி இருந்தது-இரவல் வாங்கி படித்த அந்த புத்தக புழுவுக்குள்
ஆண்டுகள் பல ஒளி வருட வேகத்தில் பின்னோக்கி சுழல..........
புகைப்பட கருவியுள் காணப்பட்ட பழைய படச் சுருள் ஞாபகப் புகையாக மனதின் அறையை நிறைத்தது
வளர்ந்த மனிதரின் ஒடிசலான தேகம், என்றும் இளமையை தரித்து, புது மொட்டுகளையும் நவீன கிறித்துவ மெட்டுகளை முனுமுனுக்க செய்து கொண்டிருந்தது.
ஏனோ அந்த பழைய வீட்டிற்குள் சிரிப்பும், சிந்திப்பும், செயல்பாடும், வாலிபருக்கு வழி காட்டும் சீரிய நோக்கும் எப்போதும் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தது. எப்போதும். அதைக் காண, கல்லூரி களைப்புக் கூட தீராத நேரத்தில்,
ஓடி வந்து, வெறுந்தரையில் உட்கார்ந்து, பேசி சிரித்து, சிரம் தாழ்த்தி ஜெபம் செய்து பின்னர் வீடு திரும்பிய நாட்கள் நாட்குறிப்பேட்டில்
இடம் பெறாவிட்டாலும், நன்னினைவாற்றலில்
நீங்கா இடம் பெற்றுள்ளது.
இன்றும் திருச்சி செல்லும் போது புத்தூர் சந்தையை கடந்து வாகனத்தை செலுத்தி அவ்வீட்டின் வழியாக சென்று, என் மனைவிக்கும்
ஒன்றுமறியா என் இரண்டு வருட குழந்தைக்கும் மலரும் நினைவுகளை பூச்சரமாக தொடுத்து- மைக்கேல் அண்ணன் தெரியுமா? இந்த வீட்டை பார்க்கும் போது எனக்கு அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.
கல்லூரி காலமும் கடந்தது; கனத்த மனதை ஏற்படுத்திய அந்த வீடும் மறைந்தது.
பெரிதும் மாறாத திருச்சி சாலையில் என் வாகனத் தடம் சுற்றி வர மற்றுமொரு சிந்தை...........
என்னை போல் எத்தனை பேரை பாதித்திருப்பார் இந்த மனிதர்........
பாசிடிவ் பாதிப்பு அதுவும்..........
நாகநாதர் டீ கடையைத் தாண்டும் போது வந்த கூட்டமான இரு சக்கர இளைஞர்களை கண்டேன்.........
பங்கு பெறமுடியாமல் போன பைக் ராலி நினைவில் நின்றது.....
ஹ்ம்ம்- அது ஒரு காலம் அண்ணா. இப்போ என்னா செய்யுறீங்க? நீங்க நல்லா இருக்கணும்னு நாதர் ஏசுகிட்ட நாங்க பிரார்த்தனை பண்ணுறோம்.........
இன்னும் நெறைய இம்பாக்ட் பண்ணுங்க இளைஞர்கள் மத்தியில

No comments:
Post a Comment