Monday, March 15, 2010

உயிர்தெழுந்த இயேசுவின் கதை இது

நேரத்  துளிகள் நின்று திரும்பி பார்த்தன
இறந்த மனிதன் எழுந்து நிற்க,
பரந்த வான் வந்தனம் செய்தது
தன்னை படைத்தவரை

மூன்று நாட்கள் மூச்சிழந்த பிரேதம்,
முழங்கால்களை முடக்கி நிற்க செய்தது.
பாதாளம் அடக்க இயலா அடைக்கல கடவுள், 
என் வேந்தன் வெற்றி பெற்றார்.....இறுதியில்

அவ்வல்லமை இன்றும் செயல் பட்டு
அழிந்த அனைவரையும் புதிதாக்குகிறது
கூபிட்டவரை கரம் நீட்டி தாங்குகிறது.
உயிர்தெழுந்த இயேசுவின் கதை இது...  

Sunday, March 14, 2010

கொஞ்சம் கற்பனை-
உயிர் கொடுத்து உலாவ விட்டு
அதை மக்கள் கிட்ட விற்பனை...........

நினைச்ச காரியம் கை கூட
எடுத்த காரியம் வெற்றி பெற
ஏழைகளை காப்பாற்ற,
இல்லாதவர்களுக்கு உதவ

ஜாடி நிறைய காசு,
வெள்ளி, தங்கம், செப்பு
என திறமை தேங்கி கிடக்கு.
எடுத்து விரையம் ஆகாம,

பயன்படுத்துங்க பத்து பேருக்கு,
எழுத ஆரம்பித்தேன் இருவருக்கு,
எழுத போறேன் இல்லாதவர்க்கு.

வழி திறங்க என் தேவனே
வல்லமை தாங்க என் ராஜாவே
என பிரார்த்திக்கிறேன் பரம பிதாவை